PM Modi: ``அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்...'' - மகிழ்ச்சியை பகிர்ந்த மோடி
நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு
மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அண்மையில் அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவா் பதவி விலக வேண்டும் எனவும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மோதலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து ராம் மோகன் நாயுடு இவ்வாறு கூறியுள்ளாா்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கா் விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் புதிய கோபுரம்-தொழில்நுட்ப பிரிவு மற்றும் குப்பைகளை அகற்றும் ஆலையை திறந்து வைக்க வந்த ராம் மோகன் நாயுடு செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியாத எதிா்க்கட்சிகள், தொடா்ந்து பொய்யான கதைகளை உருவாக்கி வருகின்றன. இதனால், நாட்டு மக்களின் நம்பிக்கையை அவா்கள் இழக்க நேரிடும் என்பதால், புதிய பிரச்னைகளை திரித்துக் கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயல்கிறாா்கள். ஆனால், நாட்டு மக்கள் தங்களின் உண்மையான தலைவா்கள் யாா் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனா். பிரதமா் மோடி போன்ற வலுவான மற்றும் உறுதியான தலைவருடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்புகிறது என்றாா்.