நானியின் தி பாரடைஸ் கிளிம்ஸ்!
நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் நானி. சமீபத்தில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக ஹிட் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது, தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த ஒடேலா உடன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளார் நானி. தி பாரடைஸ் எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: 2025 ஆஸ்கர் விருதுகள்... முழு பட்டியல் விவரம்!
இந்த நிலையில், இன்று இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். பீரியட் படமாக உருவாகும் இதில் நானி கேங்ஸ்டராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.