தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!
நானியின் தி பாரடைஸ் படத்தில் மோகன் பாபு..! அறிமுக போஸ்டர்!
நானியின் தி பாரடைஸ் படத்தில் வில்லனாக லெஜண்டரி நடிகர் மோகன் பாபு இணைந்துள்ளார்.
73 வயதாகும் நடிகர் மோகன் பாபு கடைசியாக கண்ணப்பா படத்தில் நடித்திருந்தார். தமிழில் சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவில் நானி முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவரது திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெருகின்றன.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் வில்லனாக லெஜண்டரி நடிகர் மோகன் பாபு இணைந்துள்ளார். சிகஞ்ச மாலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து நடிகர் நானி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தலைசிறந்த நாயகர்களும் வில்லன்களும் இருக்கிறார்கள். இவர் எல்லாமாகவும் இருந்துள்ளார். மீண்டும் அவர் ஏன் அப்படி இருக்கிறார் என உங்களுக்கு நினைவூட்ட வந்திருக்கிறார்.
தி பாரடைஸ் படத்திற்கு வருக மோகன் பாபு சார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்தில் என 8 மொழிகளில் அடுத்தாண்டு மார்ச். 23ஆம் தேதி வெளியாகிறது.