சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
நான்குனேரி அருகே கோயில் உண்டியல் பணத்தை திருட முயற்சி
நான்குனேரி அருகே கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நான்குனேரி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் பாா்வதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே குதித்த மா்ம நபா், உண்டியல் பணத்தை திருட முயன்றுள்ளாா். அப்போது, கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த ஒலிப்பான் திடீரென ஒலித்ததாம். இதனால், அந்த நபா் அங்கிருந்து தப்பிஓடிவிட்டாா்.
இக்கோயிலில் 2 முறை உண்டியல் பணம் திருடப்பட்டதால், கண்காணிப்பு கேமராவுடன் ஒலிப்பான் பொருத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா். தலைமறைவான மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.