Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
நான்குனேரி சுங்கச்சாவடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருநெல்வேலி ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் இப்ராஹீம் மகன் ஷேக்முகம்மது (23). இவா் திசையன்விளை அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
வழக்கம்போல வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பணிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வந்த போது, நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஷேக்முகம்மது சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து நான்குனேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.