'நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்
நடிகர் மோகன்லால் தன் பரோஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஆண்டிற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிப்பவர். பெரும்பாலும் அவை வெற்றிப்படங்களாகவும் அமைந்துவிடும். இறுதியாக வெளியான நெரு நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் மலைக்கோட்டை வாலிபன் வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்தித்து.
தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநராகத் தன் முதல் படமான பரோஸை (barroz) இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: ஜாக்கி ஜானின் ‘கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ டிரைலர்!
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட மோகன்லால் தன் படங்கள் குறித்து பேசினார். முக்கியமாக இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகக் கூறினார். மேலும், கதைகளைக் கவனமாகத் தேர்தெடுக்கும் கட்டாயம் நடிகராகத் தனக்கு இருக்கிறது என்றார். ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை உறுதிசெய்தார்.
இறுதியாக, பரோஸ் படம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோகன்லால், “என் படங்களைப் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன். என் படம் பேசும்” என பதிலளித்தார்.