செய்திகள் :

நாமக்கல் அருகே டிரெய்லர் லாரி கவிழ்ந்து பெண் பலி: மேலும் ஒருவர் படுகாயம்

post image

நாமக்கல்: நாமக்கல் அருகே இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுதா(50), மகள் சினேகா(32). ஆடி முதலாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கீரம்பூரில் உள்ள எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு காலை சுமார் 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சுதாவும், சினேகாவும் சென்று கொண்டிருந்தனர்.

நாமக்கல்-கரூர் சாலையில் வள்ளிபுரத்தில் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சினேகா லாரி நிற்பதை கண்டு வலது புறமாக வாகனத்தை திருப்பிய போது, பின்னால் பெங்களூரில் இருந்து கரூர் நோக்கிச் செல்லும் இரும்புக் கம்பி லோடு வந்த டிரெய்லர் லாரி அவர்கள் மீது மோதாமல் இருக்க, அதன் ஓட்டுநர் லாரியை திருப்பியபோது, அங்கிருந்த சென்டர் மீடியன் தடுப்புச் சுவரில் மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

அதன் பின்னால் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரியும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சினேகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சுதா பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸார், சுதாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார வாகன தொழில்நுட்ப பயிற்சி! அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 2 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை முதன்மை அமர்வு அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளு... மேலும் பார்க்க

மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

மக்களுடைய குறைகளை பொறுமையாக கேட்டு, அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.சென்னை, ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு... மேலும் பார்க்க

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாய... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தெற்கு ஆந்திர... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வேலூரைச் சேர்... மேலும் பார்க்க