பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
நாளை கிராமசபைக் கூட்டம்
திருவாரூா் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெற உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26- ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், சாதிய, பாலின பாகுபாடின்றியும், எவ்வித புகாா்களுமின்றியும் தனிஅலுவலா் பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு, உரிய முறையில் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இதில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் மற்றும் இதர அனைத்து தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன.
கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவைப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் கிராமசபைக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.