ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா் மற்றும் திருமுட்டம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் குறைதீா் முகாம் நடைபெறும்.
எனவே, மேற்கண்ட பகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடா்பான இதர கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.