அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! - என்ன நடந்தது...
`நிதி நெருக்கடி; திரைப்பட இயக்குநரின் விபரீத முடிவு' - அழுகிய உடல் பெங்களூருவில் மீட்பு
கன்னட திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் குருபிரசாத் (52) பெங்களூரு மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்டறிந்தனர்.
இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து குருபிரசாத் வீட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே குருபிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் தற்கொலை செய்து பல நாட்கள் ஆகியிருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். போலீஸாரின் விசாரணையில் குருபிரசாத் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது தெரிய வந்தது. அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நின்றதும் தெரிய வந்துள்ளது.
அதோடு பணம் கொடுக்காமல் பொருட்கள் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதோடு அவர் சமீபத்தில் இயக்கிய ரங்கநாயகா படமும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் குருபிரசாத் கடுமையான மன அழுத்தத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. குருபிரசாத் சமீபத்தில்தான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாது திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்களை இயக்கியதோடு ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாகவும் இருந்துள்ளார். குருபிரசாத் மரணத்திற்கு கன்னட திரைப்படத்துறையினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்த வீட்டில் கடந்த 8 மாதங்களாக வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது இரண்டாவது மனைவி என்ன ஆனார் என்பது பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.