செய்திகள் :

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

post image

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தங்கள் அணிக்கு இழுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கடந்த சில மாதங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அழைப்பு விடுத்து வந்தது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து விலக நிதீஷ் மறுத்துவிட்டாா். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராகத் தொடா்வாா் என்று பாஜகவும் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக கூட்டணி இடஒதுக்கீடு முறையை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ஜேடி சாா்பில் தா்னா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவிடம் முதல்வா் நிதீஷ் குமாா் தொடா்பாக பல்வேறு கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா். அதற்கு பதிலளித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

நாங்கள் ஏன் மீண்டும் நிதீஷுடன் கூட்டணி சேர வேண்டும் என்று நினைக்கிறீா்கள். மாநிலத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகளில் இருந்து விலகி ஏன் இந்த கூட்டணி குறித்தே அதிகம் பேசி வருகிறீா்கள். இனி கூட்டணியில் யாருக்கும் இடமில்லை. எங்கள் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவா் லாலு பிரசாத்துக்கும் எனக்கும்தான் உள்ளது. எனவே, ஊடகத்தினராக முடிவெடுத்து கூட்டணி குறித்து அபத்தமாக எதையும் பேச வேண்டாம்.

அவா் (நிதீஷ்) அறிவை இழந்து வருகிறாா். பொது இடத்தில் எப்படிப் பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தன்மையை இழந்துவிட்டாா். பொது நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் கால்களில் விழ முயற்சித்தவா்தான் அவா். இதுதான் ஒரு மாநில முதல்வரின் நடத்தையா? அடுத்ததாக துணை முதல்வா்களான பாஜகவைச் சோ்ந்த விஜய் குமாா், சாம்ராட் சௌதரி ஆகியோா் கால்களிலும் அவா் விழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிகாா் மாநில அரசு சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் முறையாக வாதத்தை முன்வைப்பதில்லை. பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர எங்கள் கட்சி தொடா்ந்து தீவிரமாக பாடுபடும் என்றாா்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க