செய்திகள் :

நிதீஷ் ரெட்டியால் குழம்பிய இந்திய தேர்வுக்குழு!

post image

நிதீஷ் ரெட்டியின் எதிர்பாராத சிறப்பான பேட்டிங் அணித் தேர்வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிதீஷ் ரெட்டி இந்தத் தொடரில் 298 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.25ஆக இருந்தது. மெல்போர்னில் சதமடித்து அசத்தினார். பெர்த்தில் 41, 38 ரன்களும் எடுத்தார்.

21 வயதாகும் நிதீஷ் ரெட்டி 5 விக்கெட்டுகள் எடுத்தும் அசத்தினார்.

நிதீஷ் ரெட்டியின் இந்த சிறப்பான ஆட்டம் அணித் தேர்வர்கள் மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியதென முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

பலரும் பாராட்டிய நிதீஷ் குமாரின் தேர்வை குறித்து வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார் சஞ்சய் பாங்கர். அவர் கூறியதாவது:

நிதீஷின் எதிர்பாராத ஆட்டம் இந்திய அணியை தடுமாற்றத்தில் தள்ளியது. நிதீஷ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இவர்களை வைத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

ஆஸி. பிட்ச்களில் தேவைக்கு ஏற்றபடி உடனடியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். முன்னதாகவே சரியாக முடிவெடுத்திருந்தால் இந்திய அணிக்கு நல்ல காம்பினேஷன் அமைந்திருக்கும் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணியில் கேமரூன் கிரீன்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முழு உடல்தகுதியுடன் இருப்பார் என ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.ஐசிசி சாம்பி... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

அயர்லாந்துக்கு எதிராக இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.அயர்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில... மேலும் பார்க்க

ஆஸி. ரசிகர்களுக்கு நற்செய்தி: சாம்பியன்ஸ் டிராபியில் ஹேசில்வுட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பாரென ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் முழங்கால் காயம் காரணமாக தொடரில... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடரில் ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரர் யார்? ஜியார்ஜ் பெய்லி பதில்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.இந்... மேலும் பார்க்க

எஸ்ஏ20 விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் பலனடைகிறது: ரஷித் கான்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் வளர்ச்சியடைகிறது என ரஷித் கான் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் (எஸ்ஏ20) ஜன.9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மும்பை கேப்... மேலும் பார்க்க