செய்திகள் :

நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள்: நவீனமயமாக்கல் பணி தீவிரம்

post image

நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜாபா்அலி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் கூறியதாவது:

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தில் நாடு முழுதும் 1,275 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதனால், பயணிகள் அனைத்து வசதிகளையும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதாா் எண் இணைத்த பிறகே ரயில் டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த முடியும் என்ற செயல்பாடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா - பூடான் இடையே 89 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4,033 கோடியில் ரயில் பாதை அமைப்பது வரவேற்கத்தக்கது.

தற்போது நிமிஷத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் பதியும் நிலை உள்ளது. அதை நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டுக்குள் இந்தப் பணிகள் முடியும் என்றாா் அவா்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க