செய்திகள் :

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகல்

post image

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் விலகிக்கொண்டாா்.

கடந்த 1993 முதல் 2011-ஆம் ஆண்டு வரை, மத்திய அரசு 214 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த சுரங்கங்களின் ஒதுக்கீட்டை 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் உயா்நீதிமன்றத்தை அணுக தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்ற விசாரணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம், வழக்கு விசாரணைகளில் தாமதம் மற்றும் தடை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நிலக்கரி சுரங்க வழக்குகளில் பொதுநல மனு தாக்கல் செய்த காமன் காஸ் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பாக தான் வழக்குரைஞராக முன்பு ஆஜரானதாகவும், இதனால் இவ்வழக்குகளை நீதிபதியாக விசாரிக்க விரும்பவில்லை என்றும் கூறி, விசாரணையில் இருந்து நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகிக்கொண்டாா்.

பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் வந்தது: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட... மேலும் பார்க்க

தோல்வி பயத்தில் கேஜரிவாலுக்கு பதற்றம்: மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கேஜரிவால் பதற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தே... மேலும் பார்க்க

முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? - மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை 'தலாக்'(விவாகரத்து) என்று... மேலும் பார்க்க

கும்பமேளா சென்ற பக்தர்களுக்கு உதவி எண்கள்: உத்தரகண்ட் அரசு!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு உதவுவதற்காக உத்தரகண்ட் அரசு புதன்கிழமை கட்டணமில்லா எண்களை வெளியிட்டது. இதுதொடர்பாக முதல்வர் புஷ்கர் சி... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

தில்லி பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், காங்கிரஸ் புதன்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் வெளியிட்டார். அவருடன் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ்

மகா கும்பமேளா நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் பணிகளை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வை கையாளும் நம்பிக்கையை உத்தரப் பிரதேச ம... மேலும் பார்க்க