செய்திகள் :

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

post image

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது.

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் கானாபாரோ (வயது 116) கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று காலமானார்.

இந்நிலையில், அவருக்கு அடுத்து உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரத்தைச் சேர்ந்த ஈதல் கேடர்ஹாம் என்ற 115 வயது மூதாட்டிக்கு சொந்தமாகியுள்ளது.

இந்தியப் பயணம்!

தெற்கு இங்கிலாந்திலுள்ள ஷிப்டன் பெல்லிங்கர் எனும் கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று பிறந்த ஈதல் கேடர்ஹாம், தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் சந்தித்துள்ளார்.

பயணம் செய்வதை அதிகம் விரும்பிய அவர் கடந்த 1927 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவுக்கு வந்துள்ளார். சுமார் 3 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, ஒரு ஆங்கிலேய குடும்பத்தினரின் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்த அவர் பின்னர் மீண்டும் தனது தாயகத்துக்கு திரும்பியுள்ளார்.

1931-ம் ஆண்டு ஹாங்காங்கில் பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றிய நார்மன் என்பவரை சந்தித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் பிறந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு நார்மன் மரணமடைந்துள்ளார்.

தற்போது லண்டனிலுள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வரும் ஈதல், அவருக்கு கிடைத்துள்ள இந்தப் புதிய பட்டத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

நீண்ட வாழ்வின் ரகசியம்!

தனது நீண்ட வாழ்வுக்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது, “வாக்குவாதம் செய்யாதீர்கள், நான் என்றும் வாக்குவாதம் செய்ய மாட்டேன், பிறர் பேசுவதைக் கவனித்துக்கொண்டு எனக்கு பிடித்ததை செய்வேன்” என அவர் கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர், சுமார் 122 ஆண்டுகள் 164 நாள்கள் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் கால்மண்ட் என்ற பெண்தான் என கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாக்., கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டா பக்கங்கள் முடக்கம்! காரணம் என்ன?

இதையும் படிக்க:உலகின் மூத்த பெண் 116 வயதில் மரணம்!

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள்: இலங்கை வந்த சென்னை விமானத்தில் சோதனை

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமான... மேலும் பார்க்க

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க