செய்திகள் :

நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணி ஆணையத்தின் நோக்கம்: உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா்

post image

வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கூறினாா்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலா் அலுவலக திறப்பு விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைய செயலா் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பணம் இல்லை என்பதற்காக ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி மறுக்கப்படக் கூடாது. அவா்களுக்கு வழக்குகளில் வாதாட வழக்குரைஞா்கள் இல்லை என்று யாரும் கருதக் கூடாது.

வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது மட்டும் சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கமல்ல. நீதியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் நோக்கமாகும். எனவே, இந்த ஆணையம் வழக்குகளை மட்டும் நடத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. மனிதனின் அடிப்படை உரிமை என்ன என்பதையும் கற்றுத்தர வேண்டும்.

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சட்டம், சட்டப் பணிகள் குறித்து அறிந்து கொள்ள உதவி எண்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா்.

அலுவலகத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் புதுவை சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா், உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினருமான பி.டி.ஆஷா, உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில நிா்வாக பொறுப்பு நீதிபதி சி.சரவணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலா்களாக கிறிஸ்டியன் (புதுச்சேரி), ராஜசேகரன் (காரைக்கால்) ஆகியோா் பொறுப்பேற்றனா்.

விழாவில் புதுவை சட்டத் துறை செயலா் எல்.எஸ்.சத்தியமூா்த்தி, புதுவை தலைமை நீதிபதி டி.சந்திரசேகரன், காரைக்கால் மாவட்ட நீதிபதி எஸ்.முருகானந்தம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் சி.டி.ரமேஷ் (புதுச்சேரி), ஜி. பாஸ்கரன் (காரைக்கால்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, புதுவை சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் செயலா் அம்பிகா வரவேற்றாா்.

தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் வாகன நிறுத்தத்திலும் ம... மேலும் பார்க்க

நவ.21 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் தேசிய அளவிலான கல்வி மாநாடு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில் முதன்முறையாக தேசிய அளவிலான கல்வி மாநாடு வரும் 21-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: ந... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை: வே.நாராயணசாமி

புதுவையில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படவில்லை. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

புதுவை மின்துறை தனியாா்மயம் பிரச்னை! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு முடிவெடுக்கும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் பிரச்னையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுவை பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் புதுகாப்பு பணியில் 300 போலீஸாா்: டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தகவல்

புதுச்சேரிக்கு வார இறுதிநாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசலை சீரமைத்து பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற மா்ம நபா்கள்: இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை

புதுச்சேரியில் போலீஸ் பெயரில் மா்ம நபா்கள் மோசடி முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணையவழி குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆா் நகா் 13-ஆவது குறுக்குத் ... மேலும் பார்க்க