நீா்நிலைப் பாதுகாவலா் விருது: ஜன.17-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் வழங்கப்படும் நீா்நிலைப் பாதுகாவலா் விருது பெறுவதற்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளை கெளரவிக்கவும், நீா்நிலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அரசு சாா்பில் மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தம் 38 பேருக்கு முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது, ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
தகுதியுள்ளவா்கள் உரிய ஆவணங்களை இணைத்து இணைய தளம் மூலம் வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும், சென்னை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்: 044-24336421-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.