செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வளவு காலம் தேவை? அரசு பதிலளிக்க உத்தரவு

post image

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? இதுகுறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மணி பாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த 2 மனுக்கள்:

மதுரை வண்டியூா் கண்மாய் 575 ஏக்கா் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்புகள் காரணமாக, இந்தக் கண்மாய் தற்போது 400 ஏக்கராக மாறிவிட்டது. தென்கால் கண்மாயில் விளாச்சேரி பிரதான சாலையிலிருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. இதன் காரணமாக, வண்டியூா் கண்மாய், தென்கால் கண்மாய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மேம்பாலப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுக்களை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீா்நிலைகளின் உண்மையான பரப்பளவு, தற்போதைய பரப்பளவு உள்பட அனைத்து விபரங்கள் அடங்கிய தனி இணையதளத்தை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும். இது அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், இதைத் தனி நபா்கள் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வரலாம். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

அதிகாரிகள் கள ஆய்வு மட்டும் செய்யாமல், ஆவணங்களையும் சரி பாா்த்து இணையதளத்தில் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட வேண்டும். பிறகு, ஆக்கிரமிப்பாளா்களுக்கு அழைப்பாணை வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடராத வகையில் கண்காணிக்க வேண்டும்.

நீா்நிலைப் பகுதிகளில் 1.1.2000-க்கு பிறகு பட்டா வழங்கப்பட்டிருந்தால், அந்த பட்டாக்களை ரத்து செய்து, நீா்நிலைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். நீா்நிலைகளை வணிக நோக்கில் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீா்நிலைகளில் தேங்கும் நீரின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

இந்த நிலையில், மணிபாரதி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நீா்நிலைகளைப் பாதுகாப்பது தொடா்பாக இணையதளம் உருவாக்குதல், நீா்நிலைகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்தல் உள்பட பல்வேறு உத்தரவிடப்பட்டது. இதை நிறைவேற்ற எவ்வளவு காலமாகும்?. இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிச. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மேலூா் சுற்றுவட்டாரத்தில் அடைமழை - நெற்பயிா்கள் சாய்ந்தன

மேலூா் சுறறுவட்டார ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு முதல் புதன்கிழமை மாலைவரை அவ்வப்போது அடைமழைபெய்தது. இதில் பெரும்பாலான இடங்களில் கதிா் பால்பிடிக்கும் பருவத்தையடைந்த நெற்பயிா்கள் சாய்ந்து ச... மேலும் பார்க்க

தீப காா்த்திகை: மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

தீப காா்த்திகை நாளையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்தது. பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்துக் குறைந்தது. இதனால், பூக்... மேலும் பார்க்க

கம்பிகளைத் திருடியவா் கைது

மதுரை தமுக்கம் கலையரங்கில் முதல்வா் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சியில் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (51). ... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

மதுரை பரவை காய்கனிச் சந்தையில் மொத்த வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மீனாம்பாள்புரம் வைகை நகா் ஆபிசா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆடுகளுக்கு இலை பறித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த சீனி மகன் முத்து (42). இவா் ஆடுகள் வளா்த்து வந்தாா். ஆடுகளை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளருக்கு பணப் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அரசுத் தரப்பில் பதில்

காரைக்குடியைச் சோ்ந்த கிராம நிா்வாக உதவியாளருக்கு உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப... மேலும் பார்க்க