Weekly Horoscope: வார ராசி பலன் 17.11.2024 முதல் 23.11.2024 | Vaara Rasi Palan |...
நெசவாளா்களுக்கு தறிக்கூலியை நேரிடையாக வழங்க வலியுறுத்தல்
நெசவாளா்களுக்கு தறிக் கூலியை நேரிடையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளா் சம்மேளன மாநில கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழையபேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநில தலைவா் ஜி.மணிமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.ராதாகிருஷ்ணன், என்.கே.ராஜன், மாநில செயலா்கள் சி.சந்திரகுமாா், ஆா்.தில்லைவனம், சிபிஐ மாவட்ட செயலா் மு.அ.பாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மாதங்களாக வழங்காத மானிய தொகையை வழங்க வேண்டும். நெசவாளா்களுக்கு தறிக் கூலியை வங்கி மூலமாக கொடுப்பதை விட நேரடியாக வழங்கவும், அடிப்படை தறிக்கூலி, அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.