Bigg Boss Tamil 9: எவிக்ஷனுக்கு முன்பே அதிரடி; முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட போட்டி...
நெதன்யாகுவை வாழ்த்தி மோடி போன்கால்; `இனப்படுகொலை நிகழ்த்தியவரை பாராட்டுவதா?' - காங்கிரஸ் விமர்சனம்
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது.
மோடி - நெதன்யாகு
இதை பாராட்டி நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் போன்காலில் பேசினார் இந்திய பிரதமர் மோடி.
அது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பின் காசா அமைதி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வாழ்த்தி நான் எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினேன்.
பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு அதிகரிக்கப்படும் மனிதநேய உதவி குறித்த ஒப்பந்தத்தை வரவேற்கிறேன்.
உலகில் எங்கேயும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் விமர்சனம்
மோடியின் இந்தப் போன்கால் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "கடந்த 20 மாதங்களாக, காசாவில் இனப்படுகொலையை நிகழ்த்திய பிரதமர் நெதன்யாகுவிற்கு தகுதியில்லாத பாராட்டுகளை மோடி வழங்கியது அதிர்ச்சிக்குள்ளானது மற்றும் அவமானகரமானது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
நேற்று மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Called my friend, Prime Minister Netanyahu, to congratulate him on the progress made under President Trump’s Gaza peace plan. We welcome the agreement on the release of hostages and enhanced humanitarian assistance to the people of Gaza. Reaffirmed that terrorism in any form or…
— Narendra Modi (@narendramodi) October 9, 2025
The Prime Minister has welcomed the new developments regarding Gaza and hailed President Trump. That eagerness to do so is not surprising. But what is shocking, shameful, and morally atrocious is Mr. Modi's unqualified praise for the Israeli PM Mr. Netanyahu - who has unleashed a…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 9, 2025