நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானையான காந்திமதி(வயது 56) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக்குழு யானைக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பல ஆண்டுகளாக மூட்டுவலியால் அவதிப்பட்ட யானை காந்திமதி, கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நின்றபடியே உறங்கி வந்தது.
இதையும் படிக்க: ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு!
இந்த நிலையில், இன்று(ஜன. 12) அதிகாலை கீழே படுத்தபடி மூட்டு வலியால் எழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை உயிரிழந்தது.
காந்திமதி யானை 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.