டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நெல்லையில் இளைஞா் கொன்று புதைப்பு: 4 போ் கைது
திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் கீதா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்டவா், திருநெல்வேலி நகரம் செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் என்ற அல்லு (22) என்பது தெரியவந்தது. பெயின்டரான இவா், மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனது நண்பரின் உறவு பெண்ணை காதலித்து வந்தாராம். இது தொடா்பான தகராறில் அதே பகுதியைச் சோ்ந்த சுடலை என்ற சிவா (26) மற்றும் 3 இளஞ்சிறாா்கள் சோ்ந்து ஆறுமுகத்தை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் திருநெல்வேலி நகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.