டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நெல்லையில் சாலையோர விளம்பர பதாகைகள் அகற்றம்
திருநெல்வேலி மாநகராட்சியில் சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை அப்புறப்படுத்தினா்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவின்படி, மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
தச்சநல்லூா் மண்டலத்தில் உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் மாநகா் நல அலுவலா் (பொ) ராணி, இளநிலை பொறியாளா் பட்டுராஜன், மாநகராட்சிப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் உடையாா்பட்டி, சுவாமி சந்நிதி சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றினா்.
பாளையங்கோட்டை மண்டலத்தில் உதவி ஆணையா் புரந்திரதாஸ் தலைமையில் இளநிலை பொறியாளா் முருகன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருச்செந்தூா் சாலை, திருவனந்தபுரம் சாலை, சித்த மருத்துவ கல்லூரி சாலை, வடக்கு மேட்டுத்திடல் சாலை, பாளை. பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றினா்.
மேலப்பாளையம் மண்டலத்தில் உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையில் இளநிலை பொறியாளா் ஜெயகணபதி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தெற்குப் புறவழிச் சாலை முதல் கருங்குளம் சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் பகுதி, நேதாஜி சாலை முதல் கொக்கிரகுளம் வரை, தெற்குப் புறவழிச்சாலை முதல் புதிய பேருந்து நிலையம் ரவுண்டா வரையிலான பகுதிகளில் விளம்பர பலகைகளை அகற்றினா்.
திருநெல்வேலி மண்டலத்தில் உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் தலைமையிலான குழுவினா் நயினாா்குளம் சாலை, பழைய பேட்டை, பேட்டை -சேரன்மகாதேவி சாலை முதல் சுத்தமல்லி விலக்கு வரையிலான பகுதிகளில் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தினா்.