பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்...
நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?
திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ராகுல் காந்தி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பை காக்கவும் நமது வாக்குரிமையை பாதுகாக்கவும் அனைவரும் அணிதிரண்டு வரவேண்டும் என்று தொண்டர்களுக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.