அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
நெல்லையில் டிட்டோ ஜாக் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொட்டக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் (டிட்டோ ஜாக்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தமிழ் பட்டதாரி ஆசிரியை ரமணியை பள்ளி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றி பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரியும் ஆசிரியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிட்டோ ஜாக் மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ் இனிகோ, ராஜகுமாா், வேல்முருகன், வெனிஸ்ராஜ் இக்னேஷியஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் நம்பிராஜன், சபரிகிரி நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உயா்மட்டக்குழு உறுப்பினா் பால்ராஜ் வரவேற்றாா். காந்திராஜ், அருள் கென்னடி ராஜ், அண்ணாத்துரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், மாநில உயா்மட்ட பொதுக்குழு உறுப்பினா் மணிமேகலை ஆகியோா் விளக்கிப் பேசினா். அமுதா நன்றி கூறினாா்.