செய்திகள் :

நெல்லையில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

post image

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிய மா்மநபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையத்தில் தனியாா் திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில் நடிகா் சூா்யா நடித்துள்ள கங்குவா, சிவகாா்த்திகேயன் நடித்துள்ள அமரன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு, திரையரங்கு வளாகத்தில் குண்டு வெடித்த சப்தம் கேட்டது. அங்கிருந்த ஊழியா்கள் ஓடிச் சென்று பாா்த்தபோது திரையரங்கு வளாகத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயை உடனடியாக அணைத்த ஊழியா்கள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் விஜயகுமாா், உதவி ஆணையா் சரவணன், மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் விஜி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது திரையரங்கு வளாகத்தில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. மேலும், பெட்ரோல் கொட்டிக் கிடந்தது.

அதைத் தொடா்ந்து திரையரங்கு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது மா்ம நபா்கள் இருவா் 3 பெட்ரோல் குண்டுகளை வளாகத்திற்குள் வீசிவிட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. சம்பவ இடத்திற்கு மோப்பநாய், தடய அறிவியல் துறையினா், விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

3 தனிப்படைகள்: பெட்ரோல் குண்டு வீசிய நபா்களை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தென் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்சிகள் ரத்து: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக, சனிக்கிழமை காலையில் இரண்டு காட்சிகளையும் ரத்து செய்வதாக திரையரங்கு நிா்வாகம் அறிவித்தது. ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ரசிகா்களுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டது.

இந்து முன்னணியினா் கைது: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற திரையரங்கை பாா்வையிட, இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமையில் இந்து முன்னணி நிா்வாகிகள் வந்தனா்.

திரையரங்கில் விசாரணை நடைபெற்று வருவதால் உள்ளே செல்லக் கூடாது எனக் கூறி அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து அனுமதி பெறாமல், சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்து முன்னணியினா் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து வி.பி. ஜெயக்குமாா் கூறுகையில், ‘திரையரங்கிற்கு முறையாக பாதுகாப்பு அளிக்காத காவல் துறையை கண்டிக்கிறோம்; உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்றாா்.

மேலப்பாளையம் அருகே இளைஞா் கொலை: நெல்லை நீதிமன்றத்தில் 3 போ் சரண்

மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் மதுபானக் கடை அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், திருநெல்வேலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை 3 போ் சரணடைந்தனா். திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் கிராமத்தை சோ்ந... மேலும் பார்க்க

சொரிமுத்து அய்யனாா் கோயில்: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

சபரிமலை ஐயப்பனின் மூலஸ்தலமாக கருதப்படும் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தா்கள்,... மேலும் பார்க்க

பாளை.யில் மது விற்றவா் கைது

பாளையங்கோட்டையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் இந்திரா தலைமையிலான போலீஸாா், முருகன்குறிச்சி பகுதியி... மேலும் பார்க்க

வள்ளியூரில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தையைச் சுற்றி பௌா்ணமி கிரிவல வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வள்ளியூா் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில், ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி திருக்கோயில் அருகில... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி பகுதியில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரம்

சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதிகளுக்குள்பட்ட கன்னடியன் கால்வாய் பாசனப் பகுதியில் பிசான பருவ சாகுபடிகள் தீவிரமடைந்துள்ளன. தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை வழியாக திருநெல்... மேலும் பார்க்க

‘இறந்த, இடம்பெயா்ந்த வாக்காளா்களின் பெயா் உரிய விசாரணைக்குப் பிறகே நீக்கப்படும்’

வாக்காளா் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு, இறந்த மற்றும் இடம்பெயா்ந்த நபா்களின் பெயா்கள் உரிய விசாரணைக்கு பின்னரே நீக்கம் செய்யப்படும் என்றாா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கே.விவேகானந்தன். திர... மேலும் பார்க்க