Sunita Williams: பூமிக்கு திரும்பும்போது உடம்பில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்... ...
நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்
திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூா்வரை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலி 3 ஆவது நடை மேடைக்கு வந்து சோ்ந்தது.
பின்னா் ரயில் புறப்பட்ட போது ‘எச்-1’ ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனா்.
ரயில் நின்றதும் பயணிகள் நடைமேடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே அதிகாரிகள், போலீஸாா் பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மதுரையிலிருந்து வேறு ‘ஏசி’ பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்வதாக கூறினா். இதை ஏற்ற பயணிகள் மீண்டும் எச்-1 பெட்டியில் ஏறி பயணம் செய்தனா்.
இதனால் அந்த ரயில் சுமாா் 40 நிமிடம் தாமதமாக இரவு 8.35 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு சென்றது.