செய்திகள் :

நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

post image

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், ஐந்து இடங்களிலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் அகற்றும் பணி தொடர்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் 7 இடங்களில் கொட்டப்பட்ட நிலையில் இன்று முதல் கட்டமாக கேரள அரசு சார்பில் ஐந்து இடங்களில் உள்ள கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டு 18 லாரிகளில் தமிழக காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையில் கேரள காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த கழிவுகள் கொல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும் இந்த கழிவுகள் கொட்டியது சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தில் 4 காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ மற்றும் பிற கழிவுகள் அகற்றும் பணிகள் இன்று கேரளா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை சார்பில் நடைபெற்றது. இதற்காக திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியாளர் சாக்‌ஷி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு 5 இடங்களில் முழுவதுமாக கேரள கழிவுகள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகள் தெளிக்கப்பட்டன. கொண்டா நகரம் மற்றும் பழவூர் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநில மருத்துவ கழிவுகள் இன்று காலை முதல் மீண்டும் அகற்றப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இலந்தைகுளம், வேளார்குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு சுமார் 18 லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது.

பழவூர், கொண்டா நகரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரமாகிவிட்டதினாலும் மழை தூறல் இருப்பதினாலும் அங்கு கழிவுகள் அகற்றுப்பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை கேரள கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டியது சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, மனோகரன், சேலம் மாவட்டம் ஓமநல்லூரைச் சார்ந்த லாரி ஓட்டுநர் செல்லத்துரை, கேரள மாநில கழிவு மேலாண்மை அலுவலர் நிதின் ஜார்ஜ் மற்றும் கேரள கழிவுகளை ஏற்றும் ஏஜெண்டாக செயல்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சடானா நந்தன் ஷாஜி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக: மு.க. ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 23) குற்றம் சாட்டியுள்ளார்.அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், அயல்நாட்டு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்... மேலும் பார்க்க

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்... மேலும் பார்க்க

தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் த... மேலும் பார்க்க

84 வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க