ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
நெல்லை-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் ரத்து!
‘ஃ‘பென்ஜால் புயலால் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ரயில்வே சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது.
‘ஃ‘பென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் அண்டைய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்ட நிலையில், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.