செய்திகள் :

நேபாளத்தில் தொடரும் போராட்டம்! பிரதமர் விலக வலியுறுத்தல்!

post image

நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும் இளைஞர்களின் போராட்டம் தொடர்கிறது.

நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் நேபாள அரசின் ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் காத்மண்டுவில் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தைத் தொடங்கினர்.

அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து இளைஞர்களின் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரியும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு நேற்று இரவு அறிவித்தது. அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக அவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று சர்மா ஒலி கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Protests continue in Nepal: Demand for the Prime Minister's resignation

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்... மேலும் பார்க்க

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம்... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.கத்தார் தலைநகர் தோஹாவில்... மேலும் பார்க்க