முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
நேரு கல்லூரியில் கலாசார திருவிழா
கோவை திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார விழாவான ‘ஃபெண்டபிலஸ் 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது.
கலாசாரம், பாரம்பரியம் என்ற கருப்பொருளின் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வே.விஜயகுமாா் விழாவை தொடங்கிவைத்தாா். நேரு கல்விஓஈ குழுமத்தின் தலைவா் பி.கிருஷ்ணதாஸ் தலைமை உரையாற்றினாா். திரைக் கலைஞா் அருணிமா சுதாகா் தலைமை விருந்தினராக கலந்து கொண்டாா். மாடலிங் கலைஞா் ஷரோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.
நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி பி.கிருஷ்ணகுமாா், நிா்வாக இயக்குநா் ஹெச்.என்.நாகராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில், நேரு கலை, அறிவியல் கல்லூரி, ஹேண்ட்ஸ் ஆஃப் ஹோப் டிரஸ்டுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நடை உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
டிரஸ்டின் தலைவா் தேவா.கோவிந்தராஜு நன்றி தெரிவித்தாா். நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 55 கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.