கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!
நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!
தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் 10,000 சதுர அடியில் வீடு ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, அவர் வாங்கியிருக்கும் சொத்து 10 ஆயிரம் சதுர அடிகொண்டது என்பதால், அந்த சொத்தை அவர் ஒரு சதுர அடிக்கு ரூ.30 ஆயிரம் என்ற மதிப்பில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சமூகப்பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்து இருவித கலவையான கருத்துகள் வந்துள்ளன. சிலரோ ரூ.30 கோடி வீடு வாங்கியதற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது, பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த பிறகு அவர் அதற்கு தகுதியானவர் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், மேலும் சிலர், இதற்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். அவர் இந்த வீட்டை யாரிடமிருந்தாவது பரிசாகக் கூட பெற்றிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
விஷால் பார்கவா என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமி நொய்டாவின் மிகப்பெரிய சொத்து ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்குகிறார். இது அவருக்கு சிறிய தொகைதான். இது இந்தத் துறையில் இருக்கும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களின் எழுதப்படாத சொத்து மதிப்புகளின் எல்லையை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர், அவருக்கு மிகச் செழிப்பான ஒரு வீடு கிடைத்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என்று வாழ்த்தியும் வருகிறார்கள்.