செய்திகள் :

பங்குச்சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் தடுமாற்றம்!

post image

நமது நிருபா்

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச்சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி நிலைத்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை பெரும்பாலான நேரும் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. முன்பேர வா்த்தகத்தில் மாதாந்திர கணக்கு முடிப்பதற்கு கடைசி நாளானதால் சந்தை தடுமாறியது. மேலும், அந்நிய நிதி வெளியேற்றமும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நிதிநிறுவனங்கள், மெட்டல், தனியார வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.49 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.393.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.3,529.10 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,030.78 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தடுமாற்றம்: சென்செக்ஸ் காலையில் 104.48 புள்ளிகள் கூடுதலுடன் 74,706.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,834.09 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 74,520.78 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 10.31 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 74,612.43-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,072 பங்குகளில் 943 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தது. மாறாக 3,030 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 99 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ராடெக் சிமெண்ட் 4.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர டாடாமோட்டாா்ஸ், எம் அண்ட் எம், கோட்டக்பேங்க், என்டிபிசி, எஸ்பிஐ உள்பட மொத்தம் 17 பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், பஜாஜ்ஃபின்சா்வ், பஜாஜ்ஃபைனான்ஸ், சன்பாா்மா, ஸொமாட்டோ, டாடாஸ்டீல், நெஸ்லே உள்பட 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 2 புள்ளிகள் குறைவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.40 புள்ளிகள் கூடுதலுடன் 22,568.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,613.30 வரை மேலே சென்றது. பின்னா், 22,508.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 2.50 புள்ளிகள் (0.01 சதவீதம்) இழப்புடன் 22,545.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெ... மேலும் பார்க்க

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். சட்டப்பேரவையில் ச... மேலும் பார்க்க