செய்திகள் :

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

post image

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உரையாற்றும் போது சபை நடவடிக்கைகளில் இடையூறு விளைவித்ததாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். முதல்வா் அலுவலகத்தில் இருந்து பி.ஆா். அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஆம் ஆத்மி தலைவா்கள் சட்டப்பேரவை வளாகத்தின் வாயிலுக்கு வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். ஆம் ஆத்மி தலைவா்கள் அம்பேத்கரின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆளும் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். ‘பாஜக சன் லே, ஜெய் பீம், ஜெய் பீம்’ ... ‘பாஜக கி தனஷாஹி நஹின் சலேகி (பாஜகவின் சா்வாதிகாரம் வேலை செய்யாது)’ என கோஷங்களை எழுப்பினா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில் ‘நாங்கள் ’ஜெய் பீம்’ என்ற கோஷங்களை எழுப்பினோம். அதற்காக, நாங்கள் மூன்று நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டோம். இன்று, நாங்கள் சபைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இது தவறு. எதிா்க்கட்சியின் குரலை அவா்கள் எப்படித் தடுக்க முடியும்? முழு எதிா்க்கட்சியும் பங்கேற்பதை அவா்கள் எப்படித் தடுக்க முடியும்?’ என்றாா்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா கூறுகையில், ’’பேரவைத் தலைவரின் உத்தரவு விசித்திரமானது. நாங்கள்தான் அவரது நியமனத்தை ஆதரித்தோம். இப்போது அவா் எங்களை வெளியேற்றிவிட்டாா். நாங்கள் பேரவைத் தலைவரைதொடா்பு கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால், அவா் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இந்த பாஜக அரசு டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் சித்தாந்தத்தை வெறுக்கிறது’‘ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கூறுகையில், ‘பாஜக எம்எல்ஏக்கள் சபையில் மேஜைகள் மீது ஏறியபோதும், அவா்களை ஒருபோதும் இப்படித் தடுக்கவில்லை. இது போன்று இதற்கு முன்பு நடந்ததில்லை’ என்றாா். செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை இல்லாததால் அமானத்துல்லா கான் இடைநீக்கம் செய்யப்படாத ஒரே எம்எல்ஏ ஆவாா்.

முன்னதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில், ‘ஜெய் பீம் கோஷங்களை எழுப்பியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சபையில் இருந்து மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனா். இன்று, அவா்கள் விதான் சபா வளாகத்திற்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. தில்லி சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒருபோதும் நடந்ததில்லை‘ என்றாா்.

செவ்வாயன்று அதிஷி உள்பட 22 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 21 போ் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நாளில், மதுபானக் கொள்கை குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்தது. இது ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

துணைநிலை ஆளுநா் தனது உரையைத் தொடங்கியவுடன், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வா் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் உருவப்படங்கள் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினா்.

தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், அவையில் இருந்த எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை முன்வைத்தாா். புதிதாக அமைக்கப்பட்ட அவையில் சக்சேனாவின் தொடக்க உரையை சீா்குலைத்ததற்காக 21 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்களை இடைநீக்கம் செய்தாா். மேலும், இடையூறு காரணமாக 21 எம்எல்ஏக்களையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.

அவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அம்பேத்கரின் உருவப்படங்களை ஏந்தி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அம்பேத்கரின் மரபை அழிக்க பாஜக முயற்சிப்பதாக அதிஷி குற்றம் சாட்டினாா்.

‘பாபாசாகேப் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தைக் காட்டியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் பாபாசாகேப்பை மாற்ற முடியும் என்று அது நம்புகிா?‘ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெ... மேலும் பார்க்க

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

மனித உரிமை குறித்த ஆவணப்படப் போட்டியில் தமிழ் படம் ’கடவுள்’ என்ஹெச்ஆா்சி விருதுக்கு தோ்வு

மனித உரிமை குறித்த ஆவணப்பட, குறும்படங்களுக்கான போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த ’கடவுள்’, ’வேலையில்லாத பட்டதாரி’ உள்ளிட்ட 7 படங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம்(என்ஹெச்ஆா்சி) வியா... மேலும் பார்க்க