செய்திகள் :

பங்குச்சந்தை: 1000 புள்ளிகளை தாண்டிய சரிவில் நிப்டி; இன்று Black Monday-ஆ?!

post image

அக்டோபர் 19, 1987.

அது ஒரு திங்கட்கிழமை.

அப்போது நிலவிய அரசியல் பரபரப்பு, புதிதாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பங்கள், நடந்த கரெக்‌ஷன்கள் போன்ற காரணங்களினால் உலகளவில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் சந்தை 22.6 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டது. அமெரிக்காவின் இன்னொரு சந்தையான எஸ் அண்ட் பி 500-ல் 30 சதவிகிதமும் குறைந்தது. இதன் தாக்கம் சில நாட்களுக்கு நீடித்தது.

அதனால், அந்தத் திங்கட்கிழமை 'பிளாக் மண்டே' (Black Monday என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது

பங்குச்சந்தை வீழ்ச்சி

37 ஆண்டுகளுக்கு பிறகு,

இன்று கிட்டத்தட்ட அதே நிலைமை பங்குச்சந்தையில் எட்டிப்பார்க்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகின் சொற்ப நாடுகளை தவிர, அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, அமெரிக்க பங்குச்சந்தை கிட்டதட்ட 1,500 புள்ளிகள் சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இருந்து மீளாமல் அடுத்த நாளும் கடும் சரிவில் தான் முடிந்தது அமெரிக்க பங்குச்சந்தை.

ஆக, கடந்த வாரத்தின் அமெரிக்க பங்குச்சந்தை பெரும் சரிவில் முடிவடைந்தது.

இதன் விளைவாகவும், பரஸ்பர வரியின் எதிரொலியாகவும் ஆசிய சந்தைகளும் இன்று 10 சதவிகித சரிவில் தான் தொடங்கியது.

இந்தியாவில் நிப்டி 1000 புள்ளிகள் சரிந்து இன்று தொடங்கியது.

ஆக, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இன்று வரலாற்றின் இன்னொரு 'பிளாக் மண்டே'வாக இருக்கலாம் என்பதை பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Trump Tariffs: 10 விநாடியில் ரூ.20 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச்சந்தை - சரிவு ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: `இன்று 1000 புள்ளிகள் சரிந்த நிப்டி' - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேலையை காட்டத் தொடங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தை கடும் சரிவோடு தான் முடிந்தது. உதாரணமாக, அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் சந்தை 980.84 புள்ளிகள் சரிவுக... மேலும் பார்க்க

`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளைவுகள் என்ன?

"ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. நோயாளி பிழைத்துவிட்டார் மற்றும் சரியாகி வருகிறார். நோயாளி முன்பை விட மிகவும் வலிமையானவராகவும், பெரியவராகவும், சிறந்தவராகவும், அதிக பலமனாவராகவும் வருவார் என்பது முன் கணிப்பு"... மேலும் பார்க்க