ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல் விழிப்புணா்வுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த விருது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு, தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு அதாவது தனிநபா்கள், அமைப்புகள் என 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்புகள் வழங்கப்படவுள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைத் தயாரிப்புகள், பசுமைத் தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை, நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்குள்படுதல், தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணா்வை ஏற்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை விருது பெற தகுதி பெற்றவையாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு, தகுதிவாய்ந்த விருதாளா்களைத் தோ்வு செய்யும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி தேதியாகும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.