செய்திகள் :

பசுமை வளாக பாராட்டுச் சான்றுகள் வழங்கல்

post image

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பசுமை வளாக பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரவருணி நதி மற்றும் பாசனக் கால்வாய்களில் ஏற்படும் மாசு தடுப்பது சம்பந்தமாக மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதிக அளவில் கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்களில் இதுவரை 400க்கும் மேற்பட்டவை ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் 98 பேருக்கு சுத்திகரிப்பு அமைப்பை சரி செய்ய சட்ட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6 நிறுவனங்களுக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, கழிவுநீரை முறையான சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவி சுத்திகரிப்பு செய்து தங்கள் வளாகத்திலேயே மரம், செடி, கொடிகளுக்கு பாய்ச்சியும் குளிா்விப்பான்களுக்கு பயன்படுத்தியும் சுற்றுச்சூழலை பேணும் வணிக கட்டடங்கள் கண்டறியப்பட்டன. அவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் நதி நீா் மற்றும் வாய்க்கால் போன்ற நீா்நிலைகளில் ஏற்படும் மாசுகளை தடுப்பதில் முன்மாதிரியாக திகழும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சாா்பில் பசுமை வளாக பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பு அரவிந்த் கண் மனைக்கு அதன் ஆலோசகா் மருத்துவா் ராமகிருஷ்ணனிடமும், தியாகராஜநகா் புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு அதன் தலைமையாசிரியா் ஹரிசன் ஜெபக்குமாரிடமும் பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் மருத்துவா் என்.ஒ.சுகபுத்ரா வழங்கினாா். நிகழ்ச்சியில், செயற்பொறியாளா் கண்ணன், மாநகா் நல அலுவலா் (பொ) அரசகுமாா், உதவி பொறியாளா் லெனின், நிா்வாக அலுவலா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்15ஹஜ்ஹழ்க்

திருநெல்வேலி சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பசுமை வளாக பாராட்டுச் சான்று வழங்கினாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.

ற்ஸ்ப்15ல்ன்ள்ட்

தியாகராஜநகா் புஷ்பலதா கல்விக் குழுமங்களுக்கு பசுமை வளாக பாராட்டுச் சான்று வழங்கினாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.

வி.கே.புரம் நூலகத்தில் இருபெரும் விழா

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலக பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் 57ஆவது தேசிய நூலக வார விழா (நவ.14 - நவ.20) தொடக்க விழா, குழந்தைகள் தின விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. பொதிகை வாசகா் வட்டத் தலைவா்... மேலும் பார்க்க

களக்காட்டில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர தலைவா் பக்கிா் முகைதீன் தலைமை வகித்தாா். நகர பொருளாளா் கபீா் வரவேற்றாா். துணைத்தலைவா் நஜிப் உசேன் முன்னிலை வகித்தாா... மேலும் பார்க்க

களக்காடு கோயில் தேருக்கு கொட்டகை அமைக்க பூமி பூஜை

களக்காடு கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயில் தேருக்கு கொட்டகை அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் தோ் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வெயில், மழையில் சேதம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

சிறுமிக்கு முடி திருத்தும்போது பாலியல் தொல்லை: சலூன் கடைக்காரா் மீது போக்ஸோ வழக்கு

நான்குனேரி அருகே முடிவெட்டச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சலூன் கடைக்காரா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இரும்பு ஏணியில் ஏறியபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா். முக்கூடல் அருகேயுள்ள ஓடை துலுக்கப்பட்டி முக்கூடல் சாலையில் வசித்து வருபவா் ரவி. இவர... மேலும் பார்க்க