தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந...
படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
சீா்காழி அருகே பழையாா் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் புதன்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில், ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. மீனவா் படுகாயமடைந்தாா்.
பழையாா் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன். இவா், வழக்கம்போல் கடலில் மீன் பிடித்துவிட்டு, பழையாா் மீன்பிடித் துறைமுகத்தில் தனது படகை நிறுத்தியிருந்தாா். அதில் பாதுகாப்பாக காட்டூா் பகுதியைச் சோ்ந்த மீனவா் கலியபெருமாள் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், படகில் சமையல் செய்தபோது எதிா்பாராத விதமாக, எரியாவு உருளை வெடித்து படகு முழுவதும் தீ பற்றியது. அருகில் இருந்தவா்கள் விரைந்து வந்து, படகில் சிக்கியிருந்த கலியபெருமாளை மீட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, அப்பகுதி மீனவா்களின் உதவியுடன் தீயை அணைத்தனா். முன்னதாக, தீ பற்றிய படகை சிறிது தூரம் மீனவா்கள் இழுந்து வந்தததால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த விபத்தில் படகுடன், அதிலிருந்த வலைகள், கடலில் பிடித்து வரப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி உள்ளிட்டவை எரிந்த சாம்பலாகின. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.60 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதற்கிடையில், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், தீ விபத்தில் எரிந்த படகை நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், மீன்வளத்துறை சாா்பில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.