செய்திகள் :

"படங்களை உருவாக்குவதை விட கடினம்; அவமானகரமாகவும் இருந்திருக்கிறது!" - 'உரியடி' தயாரிப்பாளர் சமீர்!

post image

நல்ல கண்டென்ட்களைக் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் சரியான வரவேற்பு கிடைப்பதில்லை.

அப்படியான படங்களுக்கு வணிக ரீதியான பிசினஸும் இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று பல தயாரிப்பாளர்கள் கடந்த சில வருடங்களாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Producer Sameer Bharath Ram
Producer Sameer Bharath Ram

இப்படியான நிலைமை பல சுயாதீன தயாரிப்பாளர்களுக்கு பல சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது எனவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இப்படியான பிரச்னைகள் குறித்து, சுயாதீன தயாரிப்பாளராக இருந்து 'உரியடி', 'முதல் நீ முடிவும் நீ', 'கடைசி விவசாயி' ஆகிய படங்களை தயாரித்த சமீர் பரத் ராம் பதிவிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம், "பலர் என்னிடம் ஒரு சுயாதீன தயாரிப்பாளராக உங்கள் படங்களை எப்படி இவ்வளவு எளிதாக விற்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்கு நான் புன்னகைக்கிறேன். ஏனென்றால், அது எளிதல்ல என்பதுதான் உண்மை. இதைப் பற்றி நான் பொதுவெளியில் பேசியதில்லை.

நான் பேட்டிகள் கொடுப்பதில்லை. வட்டமேசை கலந்துரையாடல்களுக்கு என்னை அழைப்பதில்லை. எங்கள் பட வெளியீடுகளிலோ, பத்திரிகையாளர் சந்திப்புகளிலோ கூட நான் அரிதாகவே பேசுவேன். ஆனால் இன்று, இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

Uriyadi Movie
Uriyadi Movie

உண்மையைச் சொல்வதானால், நாங்கள் உருவாக்கும் படங்களை விற்பது மிகவும் கடினமானது. அது வலி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. சில சமயங்களில், படங்களை உருவாக்குவதை விட இது கடினமாக இருக்கிறது.

சில நேரங்களில், இது அவமானகரமாகவும் இருந்திருக்கிறது. என்னுடைய முதல் படத்திலிருந்தே இப்படித்தான் நடந்து வருகிறது. அது நேர்மையான, உணர்ச்சி நிறைந்த ஒரு படைப்பு.

விமர்சகர்கள் அதைப் பாராட்டினர். அதைப் பார்த்த பார்வையாளர்கள் அதை அரவணைத்தனர். ஆனால் யாரும் அதை வாங்க விரும்பவில்லை. என்னை நானே சந்தேகிக்க ஆரம்பித்தேன்.

அந்தப் படம் பைரசியில் அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியது. மக்கள் அதைப் பார்க்க எவ்வளவு ஆவலாக இருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது.

ஆனால், அதை சரியான வழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க வர்த்தகத்தில் உள்ளவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது என் இதயத்தை உடைத்தது.

என்னுடைய மற்றொரு படத்தை சிலர் 'மிகவும் ஆவணப்படம் போல இருக்கிறது. கமர்ஷியலாக இல்லை.' என்று கூறினர். ஆனால் அது ஆழமான, வேரூன்றிய, முக்கியமான ஒரு படைப்பு. இருந்தாலும், அதை கவனிக்க வைக்க நாங்கள் போராட வேண்டியிருந்தது.

பின்னர் மற்றொரு படம் வந்தது. இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிராகரிப்பு இன்னும் மோசமாக இருந்தது.

ஒரு மரியாதைக்குரிய தயாரிப்பு நிறுவனம், அதை வெட்டி, ஒரு தொலைக்காட்சி தொடராக விற்கச் சொன்னது. இந்தத் துறையில் சுயாதீன தயாரிப்பாளர்களுக்கு இடம் இருக்க வேண்டும் என்று நான் ஆழமாக நம்புகிறேன். பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, ஆனால் நல்ல குரல்களுக்கு இடம் இருக்க வேண்டும்.

நாங்கள் நல்ல படங்களை உருவாக்குகிறோம். இதை நான் பெருமையின்றி, உறுதியுடன் கூறுகிறேன். அவை நீண்ட காலம் நிலைத்திருக்கும் படங்கள். மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். இவை வாங்குவதற்கு விலை உயர்ந்தவை அல்ல. இவை முதலீட்டுக்கு லாபம் தருகின்றன." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Thug Life: `கமல் சாரின் சிந்தனைகளுக்கு ரசிகன்; ஹெச்.வினோத் சாருக்கு நன்றி'- நடிகர் அர்ஜூன் சிதம்பரம்

கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'தக் லைஃப்'. படத்தில் ரங்கராய சக்திவேலுடன் உடன் வருபவர்களாக ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள், அர்ஜூன் சிதம்பரம் எனப் பலரும் ந... மேலும் பார்க்க

Vairamuthu: ``மரியாதைக்குகூட ஒரு வார்த்தை கேட்கவில்லை..'' - வைரமுத்து ஆதங்கப்படுவது ஏன்?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பழைய பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.இதில், முறையாக அந்தந்தப் பாடல்களின் இசையமைப்பாளர் அல்லது அப்பாடல்கள் இடம்பெற்ற படத்தின்... மேலும் பார்க்க

Akhil Akkineni: நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு | Photo Album

அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு அகில் அக... மேலும் பார்க்க

Thirumavalavan: "திருமா அண்ணன் ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர்" - இயக்குநர் சுப்ரமணியம் சிவா

திருவள்ளுவரின் வாழ்க்கையை மையப்படுத்தி 'திருக்குறள்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். இப்படத்திற்கு இவர் இசையமைத்தும் இருக்கிறார்.Thirukural Movieஇப்படத்தின் இசை வெளியீட்டு விழாவ... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "அதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்!" - ஆமீர் கான் சொல்வதென்ன?

ஆமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத... மேலும் பார்க்க

Benz: `` LCU -வில் மற்றொரு ஸ்டார் நடிகர்; 3 கதாநாயகிகள்" - இயக்குநர் பகிர்ந்த அப்டேட்

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் `பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை வைத்து பாக்யராஜ் கண்ணன் இந்த LCU படத்தை இயக்கி வருக்கிறார்.இப்படத்தின் மூலம் ராகவ... மேலும் பார்க்க