கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளதையடுத்து தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(ஜன. 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை(ஜன. 31) தொடங்கவுள்ளது.
மக்களவையில் ஜன. 31(வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு, இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி(சனிக்கிழமை) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதையும் படிக்க | ஜன. 31ல் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.