RR vs PBKS : 'உங்கிட்ட எண்டிங் சரியில்லையேப்பா..' - ராஜஸ்தானை எப்படி வீழ்த்தியது...
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!
தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு கிடங்கில் இன்று(மே 18) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, நெய்வேலி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது, பட்டாசு வெடித்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
வட்டாத்திகோட்டை போலீஸார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி சத்தியமூர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெடி விபத்தில் பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோரின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.