செய்திகள் :

பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

post image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியராக கரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா(55) என்பவர் பணியாற்றினார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாஸ்கர்

இந்நிலையில், பாஸ்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, வகுப்பறையில், எழுந்து நின்று படிக்க சொல்லியுள்ளார். அந்த மாணவியும் எழுந்து நின்று படித்துள்ளார். அப்போது ஆசிரியர் பாஸ்கர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவி வீட்டுக்குச் சென்றதும் தனது பெற்றோரிடம் ஆசிரியர் பாஸ்கர் நடந்து கொண்டது குறித்து அழுது கொண்டே கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். ஆனால் விஜயா பாலியல் புகாரை துளியும் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. பாஸ்கர் நடவடிக்கை தெரிந்தும் கண்டிக்கவும் இல்லை என்கிறார்கள். இந்நிலையில் பாஸ்கர் தொடர்ந்து பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பள்ளி மாணவிகள் புலம்பியிருக்கின்றனர்.

தலைமை ஆசிரியர் விஜயா

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாஸ்கரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் ஆசிரியர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர் வகுப்பில் ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் விஜயாவிடம், பல மாணவிகள் பாஸ்கர் சார், பேட் டச் செய்கிறார் என கூறியும் கண்டு கொள்ளாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் தலைமை ஆசிரியர் விஜயா ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க