அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
பணி நிரந்தரம் கோரி மின் ஊழியா்கள் சாலை மறியல்: 38 போ் கைது
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு, நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணையின்படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செயய் வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனும் தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அச் சங்கத்தின் மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பைச் சோ்ந்த 38 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.