விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்;...
``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி
ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
“விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என ஒரு தரப்பும், “இந்திய அணி செய்ததுதான் சரி” என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும், பேட்டிங் முடித்த சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேயும் கிரீஸிலிருந்து பெவிலியன் நோக்கி திரும்பினர்.
அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு கை கொடுக்க முயன்றனர். ஆனால், அதற்குள் இருவரும் டிரசிங் ரூமுக்குச் சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வீரர்களும், பயிற்சியாளரான மைக் ஹெசனும் இந்திய அணியின் டிரசிங் ரூமுக்குச் சென்றனர்.
அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி,
"நேற்றைய போட்டியில் அறம் காணாமல் போனது மிகவும் ஏமாற்றத்திற்குரியது.
விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது.
இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் அணிகள் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...