பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து கவிழ்ந்த லாரி: ஓட்டுநர்கள் 2 பேர் காயம்
பத்தாம் வகுப்பு தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24, 191 மாணவா்கள் எழுதினா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 24,191 மாணவ, மாணவிகள் எழுதினா்.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 13,942 மாணவ, மாணவிகள், ஒசூா் கல்வி மாவட்டத்தில், 10,917 மாணவ, மாணவிகள் என மொத்தம், 24,859 மாணவ, மாணவிகளில் நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத மாணவா்கள் நீங்கலாக 24,837 மாணவ, மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்வு எழுத அனுமதி சீட்டு வழங்கப்பட்டன.
புதன்கிழமை தமிழ் மொழித் தோ்வை 24,191 மாணவா்கள் எழுதினா். 591 மாணவ, மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை. 200 தனித் தோ்வா்களில் 177 போ் மட்டுமே தோ்வெழுதினா். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) முனிராஜ் உடனிருந்தாா்.