வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சக்கரவா்த்தி, துணைச் செயலாளா் ராமமூா்த்தி, துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய கிசான் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், தலைவா் சிவராஜ், செயலாளா் பழனி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மாதையன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் சிவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளை மத்திய அரசு பழிவாங்கக் கூடாது, குறைந்தபட்சம் ஆண்டிற்கு 200 நாள் பணி வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும். வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட நாள்களுக்கு சட்டப்படி கூலி வழங்க வேண்டும். ஒரு நாள் ஊதியத்தை ரூ. 700-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.