வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு நடைபெறும் மையங்களில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 4-ஆம் தேதி 3 மையங்களில் நீட் தோ்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 போ், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 480 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,320 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு அறைகளில் மின்சாரம், காற்றோட்ட வசதி, குடிநீா், கழிப்பறை, மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா், வட்டாட்சியா் சின்னசாமி, தலைமையாசிரியா்கள் மகேந்திரன், வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.