ரோபோ சங்கர் மறைவு: ``நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அ...
பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு
பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பனைமரங்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் குடும்பங்கள் உள்ளன. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதாக இருந்தால் மாவட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியா் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்பதுடன், பனை மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் வரவேற்பதுடன், பாராட்டும் தெரிவிக்கிறோம்.
இதேபோல, பிற மரங்களையும் வெட்டுவதற்கு முன் அந்த பகுதியில் உள்ள வட்டாட்சியரிடம் அனுமதி கடிதம் பெற்றுதான் பொதுமக்கள் மரங்களை வெட்ட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.