செய்திகள் :

பயங்கரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமான பிரச்னை அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர்!

post image

பயங்கரவாதம் இருநாட்டு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், சர்வதேச அளவிலான பிரச்னையாகக் கருதப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேக்ஸிமே பெர்வோட் மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், 2016-ம் ஆண்டு பிரசெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை ஒரு நாட்டின் பிரச்னை இல்லை என்பதை உணர்த்துங்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

”இதை அதிகம் ஊடகத்தின் வாயிலாகப் பார்க்காதீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தெரியும் பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையாக இருப்பதில்லை. பயங்கரவாதத்தை ஐரோப்பாவிலுள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இதை பெரிய அளவில் அனுபவித்தது இல்லை.

இங்கும் பயங்கரவாதம் நடைபெறுகிறது. ஆனால், எந்தவொரு ஐரோப்பிய நாடும் அவர்களது அண்டை நாடும் பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையாகக் கொண்டுச் செயல்படுவதில்லை. இதனால், நான் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன்.

பயங்கரவாதம் போன்ற பிரச்னைகளுக்கான செய்தி என்னவென்றால், இதை இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையாகக் கருதாதீர்கள். இது வெறும் இந்தியாவின் பிரச்னையாக நான் கருதவில்லை. அதாவது, நீங்கள் கடந்த 20-30 ஆண்டுகளில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களின் வரலாற்றைப் பார்த்தால், அவற்றுக்கு, நேரடியாக பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கும். கைரேகைகள், தடயங்கள் அல்லது அங்கிருந்து யாரேனும் இங்கு வருவது. இதுபோன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அங்கு அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைத் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க