பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!
பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞா்
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூா் முஸ்லிம் இளைஞா் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தாா்.
பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதும், சுற்றுலாப் பயணிகள் பரந்த புல்வெளி பரப்பில் மறைவிடத்தைத் தேடி ஓடினா்.
அந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளை குதிரை சவாரியில் அழைத்து வந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞரான அடில் ஹுசைன் ஷா, பயங்கரவாதிகளை தடுத்து துப்பாக்கியைப் பறிக்க போராடியுள்ளாா். இதனால் பயங்கரவாதிகளால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பஹல்காமில் புதன்கிழமை நடைபெற்ற அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச் சடங்கில் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் பங்கேற்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
‘குடும்பத்தில் வருமான ஈட்டும் ஒரே நபரான மகன் இறந்துள்ள நிலையில், அவரின் பெற்றோரை நாங்கள் கவனித்துக் கொள்வோம்’ என்று முதல்வா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறினாா்.